'கட்டா குஸ்தி 2' டிரெய்லர் வெளியீடு!... விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கோதாவில் இறங்கிட்டாங்களே!

 
gatta

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2022-ல் வெளியாகி வெற்றி பெற்ற 'கட்டா குஸ்தி' படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மீண்டும் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.

வெளியான டிரெய்லரில், முதல் பாகத்தின் கலகலப்பும், குடும்ப உணர்வுகளும் தொடர்வதோடு, இந்த முறை கதையில் அதிகளவிலான ஆக்ஷன், மல்யுத்தப் போட்டிகள் மற்றும் புதிய திருப்பங்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஜோடியின் நகைச்சுவை கலந்த மோதல்கள் மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.


புருஷன் வேலைக்குப் போகும் போது பொண்டாட்டி எப்படி வீட்டு வேலைகள் செய்கிறாரோ அதே போல மனைவி வேலைக்குப் போனால், புருஷன்காரன் வீட்டு வேலைகள் செய்வது சரி தானே என்று வரும் வசனங்களும் விஷ்ணு விஷால் வீட்டு வேலைகள் செய்யும் காட்சிகளும் கலகலப்பாக உள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரெய்லரின் காட்சியமைப்பு, பின்னணி இசை மற்றும் மல்யுத்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. முதல் பாகத்தைப் போலவே குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை, உணர்வு மற்றும் விளையாட்டு அம்சங்கள் சமநிலையுடன் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லரின் வரவேற்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Tags

From Around the web