Gatta kusthi2: ரெட் ஜெயண்ட் என் ஃபிரண்டுதான்!. நெகட்டிவிட்டி வேண்டாம்.. 3 நாள் வசூலை சொன்ன விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் விஷ்ணு விஷால். அதன் பின் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதேபோல் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த திரைப்படம் 2022 ஆம் வருடம் வெளியான நிலையில் தற்போது கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. முதல் காட்சி முதலே இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பலரும் படம் பார்க்கிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கு வசூல் அதிகரித்து வருகிறது..
இந்நிலையில், மூன்று நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகம் முழுவதும் 22 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது. இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தொடர்பாக சில கருத்துக்களை விஷ்ணு விஷால் தெரிவித்தது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே கட்டா குஸ்தி 2 படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். ஆனாலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டிருப்பது விஜய் ரசிகர்களுக்கும் கோபத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஷ்ணு விஷால் ‘ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் எனக்கும் 13 வருட நட்பு உண்டு. இதை யாரும் அரசியலாக பார்க்கவேண்டாம். பாசிட்டாவாக பாருங்கள். ஆன்லைனில் நெகட்டிவ் பரப்புகிறார்கள் எனக்கு அது பிடிக்கவில்லை. இது மாற வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
