×

சூரியின் கறுப்புப் பக்கங்களைச் சொல்ல வேண்டி வரும்... விளாசிய விஷ்ணு விஷால்

நில அபகரிப்பு புகார் கொடுத்த சூரி குறித்து விஷ்ணு விஷால் முதல்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார். 
 
சூரியின் கறுப்புப் பக்கங்களைச் சொல்ல வேண்டி வரும்... விளாசிய விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தனது நிலத்தை அபகரித்து விட்டதாக காமெடி நடிகர் சூரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விஷ்ணு விஷால் பேசியிருக்கிறார். 

அவர் கூறுகையில், ``நானும் சூரியும் 10 வருடங்கள் பழகியிருக்கிறோம். ஒரு காலத்தில் என் தந்தையின் காலில் விழுந்து `நீங்கள்தான் கடவுள்’ என்று கூறியவர் சூரி. இப்போது எங்களை ஃபிராடு என்று சொல்கிறார். சூரியின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல முடியும். 

அப்புறம் அவரோட இருண்ட பக்கங்களையெல்லாம் சொல்ல வேண்டி வரும். அப்படி சொன்னா எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கு. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

சூரியோட பணத்துல வாழணும்னு அவசியம் எங்களுக்கில்லை. சூரியோட நிலப்பிரச்சனைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை யாரோ தப்பா வழிநடத்துறாங்க. உண்மை ஒருநாள் வெளியே வரும். அப்போ அவர் புரிஞ்சிப்பாரு’’ என்றார். 

From around the web

Trending Videos

Tamilnadu News