இன்னும் படமே ரிலீஸ் ஆகல... ஆனா, 'கட்டா குஸ்தி 2' இயக்குநருக்கு விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!
விஷ்ணு விஷால் அடுத்தடுத்து நல்ல படங்களை டிக் அடித்து தயாரித்து, நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இவரே தான் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்திருக்கும் புதிய படமான 'கட்டா குஸ்தி 2'-வை செல்லா அய்யாவு இயக்கியிருக்கிறார். இது 'சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி' ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு விஷ்ணு விஷாலும், செல்லா அய்யாவும் கைகோர்த்துள்ள மூன்றாவது படம்.
2022-ஆம் ஆண்டு வெளிவந்த 'கட்டா குஸ்தி' முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 'கட்டா குஸ்தி 2'-வில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.
சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் லைக்ஸை குவித்தது. இந்த படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு இனோவா ஹைக்ராஸ் காரை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
