ரேஸ் பிஸியிலும் இத கேப்பாருனு நினைக்கல.. களத்தில் விஷ்ணுவர்தனை ஆச்சரியப்படுத்திய அஜித்
நம்பர் ஒன் அஜித்: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்த வருபவர் நடிகர் அஜித். தற்போது ரேஸிலும் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய பேஷனை நோக்கி அவர் எடுக்கும் முயற்சி அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் யாரும் செல்ல முடியாத உயரத்தை அடைந்தும் அவருடைய லட்சியத்தை நோக்கி இன்னும் அவர் பயணித்துக் கொண்டே இருப்பது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
லட்சியத்தை நோக்கி பயணம்: பொதுவாகவே அஜித்தின் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம் .அவருக்கு என அவர் வகுத்துக் கொள்ளும் நெறிமுறைகள் மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளானது. ஒரு மாஸ் நடிகராக வளர்ந்து விட்டோம், கோடிகளை சம்பாதித்து விட்டோம், நிம்மதியாக வாழலாம் என்று நினைக்காமல் தான் கொண்ட லட்சியத்தை எப்படியாவது அடைய வேண்டும் என்ற அவரது விடாமுயற்சி இன்று அனைவருக்கும் ஒரு பாடம்.
துபாயில் கூடிய திரைப்பிரபலங்கள்: இந்த நிலையில் துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் அவருடைய அணி மூன்றாவது இடத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. அதை திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அனைவருமே கொண்டாடி வருகின்றனர். அவரை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் இருந்து பல திரை நட்சத்திரங்கள் துபாய்க்கு சென்றனர். குறிப்பாக ஆரவ், விஷ்ணுவர்தன், மாதவன், வசந்த் ரவி ,அர்ஜூன் தாஸ், ஆதிக் ரவிச்சந்திரன் என பல முக்கிய பிரபலங்கள் அவருக்காக துபாய்க்கு சென்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுவர்தன் துபாய் ரேஸ் பந்தயத்தில் அஜித்தை சந்தித்ததை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்று ரிலீசான திரைப்படம் நேசிப்பாயா. முரளியின் இளைய மகன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் மக்களை ஓரளவு கவர்ந்து வருகிறது .இந்த படத்தின் ப்ரோமோஷன் படு பிஸியாக நடந்தது.
அதில் ஒரு சின்ன பிரேக் கிடைத்ததனால் அந்த ஒரு நாளில் துபாய்க்கு சென்று அந்த ரேசை போய் பார்த்தேன். அது எனக்கு ஒரு அனுபவம் தான். ஏனெனில் ஒவ்வொரு வீரர்களும் காரை மாற்றி மாற்றி ஓட்டும் போது எந்த அளவுக்கு வேகமாக அவர்கள் பணியாற்றுகிறார்கள். மெக்கானிக்கல் சிஸ்டம் எந்த அளவு சீக்கிரமாக நடைபெறுகிறது என்பதை கண்ணால் பார்க்க முடிந்தது.
அது மட்டுமல்ல அஜித் என்னிடம் ரிலீஸ் வேலைகள் எப்படி போய்க்கொண்டிருக்கின்றது என கேட்டார். அப்போது நீங்க வரலல. அதனால் எனக்கு ரிலீஸ் தேதி கிடைத்தது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் எப்பொழுது வந்தாலும் அது எங்களுக்கு ட்ரீட்டு தான் என விடாமுயற்சி ரிலீஸ் பற்றி அந்த நேரத்தில் நாங்கள் பேசிக் கொண்டோம் என விஷ்ணுவர்தன் கூறினார்.