சொன்னா நயன் கோவிச்சுக்குவாங்க.. இருந்தாலும் சீக்ரெட்டை உடைத்த விஷ்ணுவர்தன்

by Rohini |
nayanthara
X

ஹோம்லியான லுக்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா அந்தப் படத்தில் ஹோம்லியான லுக்கில் அனைவரையும் கவர்ந்திருப்பார். சரத்குமாருக்கு ஜோடியாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த படமும் பெரிய அளவில் ஹிட்டானது. படத்தில் அமைந்த ஒரு வார்த்தை சொல்ல என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

நயன்தாராவின் ஸ்டைல்: அதன் பிறகு இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் சந்திரமுகி படத்தில். அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கிலேயே நடித்து வந்த நயன்தாராவை ஸ்டைலிஷான லுக்கில் காட்டியது பில்லா படத்தில் தான். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அந்த படம் அஜித்துக்கும் ஒரு செகண்ட் இன்னிங்ஸ் ஆக மாறியது.

பிகினி உடையில் நயன்: ரஜினி படத்தின் பில்லா ரீமேக்கான இந்தப் படம் ரஜினி ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. அந்த அளவுக்கு அஜித்தின் பில்லா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதுவரை நயன்தாராவை குடும்ப பங்கான தோற்றத்திலேயே பார்த்து வந்த ரசிகர்கள் பில்லா படத்தில் பிகினி உடையில் பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால் நயன்தாராவிடம் இப்படி ஒரு ஸ்வாக் இருக்கிறது என்பதை விஷ்ணுவர்தன் அவருடன் பேசும்போதே தெரிந்து கொண்டாராம்.

கண்டமா?: நயன்தாராவிடம் இந்த படத்தை பற்றி சொல்வதற்கு நயன் வீட்டிற்கு சென்று இருக்கிறார் விஷ்ணுவரதன். அவருடன் பேசும் பொழுது தான் நயன்தாராவிடம் இப்படி ஒரு ஸ்டைல் இப்படி ஒரு ஸ்வாக் இருப்பது எனக்கு தெரியவந்தது. அதை நாம் வெளியில் கொண்டு வர வேண்டும் என முயற்சித்து தான் பில்லா படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன். அது போக பிரேமுக்கு பிரேம் அவரை மிகவும் ஸ்டைலாக காட்டியிருந்தேன்.




இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் இதை சொன்னால் நயன் கோபப்படுவாங்களா என்று தெரியவில்லை. நயனுக்கு தண்ணீர் என்றால் பயம். தண்ணில கண்டம் என்றே சொல்லலாம். வேற எந்த படத்திலயும் நயனை தண்ணீருக்குள் நடித்த மாதிரி பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் அவருக்கு தண்ணீர் என்றால் பயம். நீச்சல் குளத்தில் இறங்கும்போது அவர் பயந்து கொண்டு தான் இறங்கினார்.

அப்பொழுது எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வரும் நயனுக்கு தண்ணினா பயமா என்று எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அந்த படத்தில் அவருடைய அந்த ஸ்வாக் இன்றுவரை எல்லா படங்களிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என விஷ்ணுவர்தன் கூறினார்.

Next Story