விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிப் பெற வேண்டும் வெங்கடேஸ்வரா!.. மொட்டைப் போட்ட வெங்கி அட்லூரி!
நடிகர் சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று மொட்டை போட்டு, சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் இந்த வழிபாட்டை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதனிடையே, படத்தின் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெற்றிக்காக திருப்பதியில் இயக்குநர் வெங்கி அட்லூரி மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றியது படக்குழுவினர் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.