பட்டாம்பூச்சி போல.... சூர்யாவை துரத்தி துரத்தி டூயட் பாடும் மமிதா - வீடியோ!

 
pattampoochi

 

 

எழுதி வச்சுக்கோங்க இந்த வருஷம் முழுக்க சூர்யாவின் வருஷம் என்று சொல்லும் அளவிற்கு தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் முன்னதாக வெளிவந்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சூர்யாவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது .

அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இந்த திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகை மமிதா பைஜூன் நடித்திருக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார் பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .

pattampoochi

ஒரு நடுத்தர வயதுடைய ஆணுக்கும் அவனது பாதி வயதை கொண்ட ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை இந்த திரைப்படம் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்களில் வெளியாகியுள்ளது. 


இப்படியான நேரத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் சிங்கிள் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. பட்டாம்பூச்சி என தொடங்கும் இந்த பாடல் மமிதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான டூயட்  பாடலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதோ இந்த பாடல்

Tags

From Around the web