மமிதாவுடன் மஜா பண்ணும் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட்டாம்பூச்சி பாட்டு இன்னைக்கு வருது!..
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல்களில் ஒன்றான ‘பட்டாம்பூச்சி’ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘பட்டாம்பூச்சி’ பாடலின் ப்ரோமோ, இணையத்தில் வைரலானது. இதனால் முழுப் பாடலுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதில் சூர்யா, ‘சஞ்சய் விஸ்வநாத்’ என்ற 40 வயதான சர்வதேச பிஸ்டல் ஷூட்டிங் சாம்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்ய போராடும் அவரது வாழ்வில், ‘மேடி’ என்ற 20 வயதான இளம்பெண் நுழைவதன் மூலம் கதை புதிய திருப்பத்தை எடுக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளராக ஜி. வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’ பாடல் ரசிகர்களிடையே புதிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தாரா எண்டர்ரெயின்மண்ட் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமா இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
மேலும், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக இன்று மாலை 5.05க்கு வெளியாகும் ‘பட்டாம்பூச்சி’ பாடல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என பேசப்படுகிறது.
