அடுத்த வெற்றிக்கு தயார்: சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா:
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கருப்பன். இந்த திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தார்.

ஆர். எஸ். பிரபு தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 120 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி அபார வசூல் சாதனை படைத்திருந்தது. படத்திற்கு மிகப்பெரிய லாபமும் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக சூர்யாவின் திரைப்படம் விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
விஸ்வநாத் & சன்ஸ் ரிலீஸ்:
இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கருப்பன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கருப்பன், காப்பான் , என் ஜி கே ஆகிய இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் வெளியானது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் இரண்டு படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
