Connect with us
Vivek and MSV

Cinema News

எம்.எஸ்.வியை ஐஸ் வைத்து கவிழ்த்த விவேக்… அஜித் படத்தில் நடித்ததன் பின்னணி இதுதான்… இம்புட்டு போராட்டமா?

மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் இசையுலகில் பல ஆண்டுகள் கோலோச்சியவராக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் கிளாசிக் நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேல் தனியாக இசையமைத்திருக்கிறார். மேலும் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 200 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி. இவ்வாறு ஒரு இசை ஜாம்பவானாக வலம் வந்த எம்.எஸ்.வி, அஜித் நடித்த “காதல் மன்னன்” திரைப்படத்தில் விவேக்குடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்திருந்தார். இந்த நிலையில் விவேக், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் பேசியபோது, எம்.எஸ்.வியை “காதல் மன்னன்” திரைப்படத்தில் நடிக்க வைத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“நோ” சொன்ன எம்.எஸ்.வி

“காதல் மன்னன்” திரைப்படத்தில் எம்.எஸ்.வியை மனதில் வைத்து, “மெஸ் விஸ்வநாதன்” என்ற கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எம்.எஸ்.வியை இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்று விவேக், எம்.எஸ்.வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எம்.எஸ்.வி தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். எவ்வளவோ முயன்று பார்த்தும் அவர் முடியாது என்றிருக்கிறார்.

அப்போது ஒரு நாள், எம்.எஸ்.வி, விவேக்கிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “ஒரு நாள் சுங்கத்துறை அதிகாரிகள் என்னுடைய ஆர்மோனியத்தை பிரித்துப் பார்த்துவிட்டார்கள் தம்பி” என கூறினாராம். விவேக், “ஏன்?” என்று கேட்க, “இப்போது ஆர்மோனியத்தில் எல்லாம் போதை மருத்து கடத்துகிறார்களாம். அதனால் சோதனை செய்தார்கள்” என கூறினாராம்.

ஐஸ் வைத்த விவேக்

அப்போது விவேக், “ஐயா, நீங்க போதை பொருள்தானே ஐயா அதில் கடத்துறீங்க. எத்தனை ஆயிரம் மெட்டுக்களை போட்டு எங்களை எவ்வளவு பெரிய போதைக்கு உள்ளாக்கினீர்கள்” என்று கூறினாராம். விவேக்கின் இந்த பேச்சால் எம்.எஸ்.வி அசந்துபோய்விட்டாராம். அந்த Gap-ல் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் விவேக். இவ்வாறுதான் எம்.எஸ்.வி, “காதல் மன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top