Connect with us

Cinema News

எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக் கொண்டிருக்கிறது…கமல் அழுத்தமாக அரசியலில் தடம் பதிக்க இதுதான் காரணம்…!

விவேக் கமலுடன் ஒரு நிகழ்ச்சியில் அரசியல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கமல் அளித்த பதிலைப் பாருங்கள்.

முதலில் விவேக் எப்படி கேள்வி கேட்கிறார் என்று பார்ப்போம். இது அரசியல் நெடி தான். நான் யாரையும் குறிப்பிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்று ஆரம்பிக்கிறார்.

Rajni111

மற்றவர்கள் கட்டை விரலைக்கூட நனைப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்த பொழுதே நீஙகள்.. கழுத்தளவு ஆழத்தில் இறங்கி நின்றீர்கள். புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க. புரியாத வங்க…புரிஞ்சவங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. அந்தப் பயணம் தொடருமா?

இதே கேள்வியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். இவர் தான் முதலில் நீண்ட நாள்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிய வண்ணம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியில் பின்வாங்கி விட்டார் என்பது வேறு விஷயம்.

இதற்கு நம் உலகநாயகன் சொல்லும் சூடான பதிலைப் பாருங்கள்.

பயணம் நான் விரும்பிப் போய் ஏற்றுக்கொண்டதல்ல. கணுக்கால் கூட நனைக்கக்கூடாது என்று தான் ஒதுங்கி இருந்தவர்கள் நாங்கள். கழுத்தளவு நாங்கள் இறங்கிக் குளிக்கவில்லை. கட்டுப்பாடு இல்லாத வெள்ளம்…

எப்படி 2015ல் வந்து தாக்கியதோ…அது போல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில் தான் இருக்கிறோம். கழுத்தளவு அசிங்கமான விஷயங்கள் எங்களைச் சூழ்ந்து விட்டன.

அதில் இருந்தும் மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறோம். இது தனிமனிதன் செயலாகவே இருக்க முடியாது. நீங்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் எனும்போது தமிழர்கள் அனைவரும்.

முதல் மலேசியப் பயணம் பற்றி சொல்லும்போது அவருக்குத் தெரியும் என்று ரஜினியைக் கைகாட்டி சிரிக்கிறார். ரஜினியும் அதற்கு சிரிக்கிறார். தொடர்ந்து கமல் பேசுகிறார். நாங்கள்லாம் இளைஞர்கள். எல்லாமே வியப்பா இருக்கும். அதை இப்பக்கூட யோசிச்சிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

Kamal3

காலைல 6 மணிக்குப் புறப்பட்டுப் போனோம்னா வெயில்ல அந்த வேன்ல வச்சி யாதும் ஊரே யாவரும் கேளிர்னு பாடிக்கிட்டுப் போவோம். சிங்கப்பூர்ல இங்கெல்லாம் கூட சூட் பண்ணிருக்காங்க. அந்த நிகழ்விலே தொடங்கி பலமுறை இங்கே வந்திருக்கிறோம்.

இப்ப கூட சொன்னாரு அவரு…ரஜினி சாரு…இது என்னோட செகண்ட் ஹோமா மாறிடுச்சின்னு…அந்த அளவு நாங்கள் அடிக்கடி இங்கே வந்திருக்கிறோம்.

முதல் முறை மறக்க முடியாத நிகழ்வு தான். அதைப் பற்றி பல நினைவுகள் எங்கள் இருவருக்குமே இருக்கிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top