×

காதல் எதிர்பாராத இடத்தில் நிறுத்திவிடும் - போலீஸ் கேஸால் `விவேகம்’ நடிகர் விரக்தி

வீரம் படப் புகழ் விகேக் ஓபராய் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். 
 

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தன்று மனைவியுடன் பைக்கில் செல்வது போன்ற போட்டோ ஒன்று வைரலானது. அதில், விவேக் ஓபராய் ஹெல்மெட் அணியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், அவர் கொரோனா விதிமுறைகளின்படி மாஸ்க்கும் அணியவில்லை என்று கமெண்ட் அடித்தனர். 

அத்தோடு விடாமல் மும்பை டிராஃபிக் போலீஸுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்தனர். இதையடுத்து, விவேக் ஓபராய்க்கு இ-சலான் அனுப்பப்பட்டது. மும்பை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இதை விவேக் ஓபராய் வீட்டுக்கே சென்று கொடுத்திருக்கிறார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விவேக் ஓபராய்,``காதல் எதிர்பார்க்காத இடத்தில் நம்மை நிறுத்திவிடும். நானும் எனது மனைவியும் எங்கள் புதிய பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்துவிட்டோம். ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கிறீர்களா... மும்பை போலீஸ் உங்களுக்கு செக் வைத்துவிடும். பாதுகாப்பு எப்போது முக்கியம் என்பதை உணரவைத்த மும்பை போலீஸுக்கு நன்றி. பாதுகாப்பாக இருங்கள். டூவீலர் பயணத்தின்போது மறக்காமல் ஹெல்மெட் போடுங்கள்’’ என்று பதிவிட்டிருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News