×

இப்படி ஆகிப்போச்சே!...கடைசிவரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை.... 

 
இப்படி ஆகிப்போச்சே!...கடைசிவரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை....

சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் ஏறக்குறை அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடிக்காத ஒரு நடிகர் எனில் அது கமல்ஹாசனுடன் மட்டுமே.  அது என்னவோ, அதற்கான சூழல் கடைசி வரைக்குமே அமையவில்லை. கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பதில் விவேக் ஆர்வமாக இருந்தார். தனிப்பட்ட முறையில் கமலும், விவேக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். கமல்ஹாசன் அறிவுரையை ஏற்றுத்தான் விவேக் முதன் முதலாக ஹீரோவாக நடித்தார். ஆனால், இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. 

சில நாட்களுக்கு முன்பு இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

தற்போது விவேக்  மரணமடைந்த நிலையில் கமலுடன் நடிக்க வேண்டும் என்கிற அவரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News