அக்கா நீங்க செமயா இருக்கீங்க... அஞ்சனாவை கண்டு உருகும் இன்ஸ்டாவசிஸ்!

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இதற்கிடையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் அஞ்சனா தற்போது அழகிய ட்ரடிஷனல் உடையில் கண்ணெதிரே தோன்றிய தேவதை போன்று போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பலரின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.