×

பிரம்மன் உன்னை படைத்த பின்பு.... குடும்ப குத்துவிளக்கா போஸ் கொடுத்த பாவனா!
 

தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட ஹோம்லி போட்டோவிற்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
பிரம்மன் உன்னை படைத்த பின்பு.... குடும்ப குத்துவிளக்கா போஸ் கொடுத்த பாவனா!

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. 

‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்  தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.

பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். 

ஆனால், பாவனா தொடர்ந்து தொகுப்பாளினியாக மட்டும் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சணமாக புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்து விளக்கு போன்று போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். 

இதற்கு ரசிகர் ஒருவர், தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னது எல்லாம் பொய்யாகி விட்டது. அந்த பிரம்மன் உன்னை படைத்த பின்பு.... என கவிதைத்துடத்துடன் கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News