×

வருங்கால கணவருடன் சித்ரா வெளியிட்ட லவ்லி போட்டோ!

தன்னுடைய வருங்கால கணவருடன் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட சித்ரா

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ரா விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

அண்மையில் சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இந்த ஜோடியின் ரொமான்டிக் போட்டோ ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாக பரவிவருகிறது. இதற்கு சித்ராவின் ரசிகர்கள் பலரும், ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கு சித்து வாழ்த்துக்கள் என கூறி லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News