">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பொறுத்து பூமி ஆளுமா? புருஷன் கெடச்சதுல இருந்து உன் கால் தரையில் படல…!!
சீரியல் நடிகை சித்ரா நடத்திய அழகிய போட்டோ ஷூட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ரா விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
அண்மையில் சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் இந்த ஜோடியின் ரொமான்டிக் போட்டோ அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவிவருகிறது. சித்ராவும் முன்பை விட அதிக மகிழ்ச்சியாகவும், குஷியாகவும் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது புடவையில் லட்சணமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதே போன்று திருமணத்திற்கு பின் இன்னும் மகிழ்ச்சியாக இருங்கோ சித்து என தீவிர ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர்.