ஐட்டம் டான்சராக மாறிய விஜே மகேஸ்வரி!.. கிறுக்கு சிறுக்கி பாட்டுல இவ்ளோ கிளாமர் ஏன்?..
90ஸ் கிட்ஸ்களின் மனதில் தனி இடம்பிடித்த சன் மியூசிக் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் விஜே மகேஸ்வரி. அந்நாளில் பாடல்களை ரசிப்பதற்காக மட்டுமின்றி, தொகுப்பாளர்களுடன் பேசுவதற்காகவே ரசிகர்கள் நீண்ட நேரம் தொலைபேசி லைனில் காத்திருந்த காலமும் இருந்தது.
16 வயதிலேயே சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமான மகேஸ்வரி, பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்றார். சமீப காலமாக அவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மகேஸ்வரி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், “அம்மாவான பிறகு ஏன் கவர்ச்சியாக நடக்கக்கூடாது என்ற கேள்வியே பழமையான சிந்தனை. இந்த தலைமுறை இத்தகைய கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. எனக்கு பிடித்ததை செய்வதே என் விருப்பம்,” என அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை மட்டுமின்றி தனது மகனையும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாகவும், அதுகுறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் மகேஸ்வரி கூறினார்.
“முன்பெல்லாம் பொதுவெளியில் அதிக மரியாதை கிடைத்தது. தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், ஆபாசமான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் அவசியமாக இருந்தாலும், அதே இடத்தில் இத்தகைய செயல்கள் மனவேதனையை ஏற்படுத்துகின்றன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவர் நடித்துள்ள “கிறுக்கு சிறுக்கி” என்ற வீடியோ ஆல்பத்தின் புரமோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
