பிரம்மாண்ட வீட்டின் கிரகப்பிரவேசம் - VJ மணிமேகலைக்கு குவியும் வாழ்த்துக்கள்!
VJ மணிமேகலை:
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் மணிமேகலை. இவர் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பிறகு 2019 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இணைந்து மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார் .


பிரம்மாண்ட வீட்டின் கிரகப்பிரவேசம்:
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் கிராமம் ஒன்றில் புதியதாக பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கும் மணிமேகலை அந்த வீட்டின் கிரகப்பிரவேச பூஜை செய்து அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் .

மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து இந்த அளவு உச்சத்தை தொட்டிருக்கும் மணிமேகலை - உசைன் ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
