
latest news
உண்மையை சொன்னது குத்தமா.. விஜே பார்வதிக்கு நடந்த சோகம்
நடிகைகள் அல்லது சினிமா பிரபலங்கள் பொதுவாக பட வாய்ப்புக்கு அட்ஜஸ் செய்துதான் போக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது இந்த குரல்கள் எழுகிறது. ஆனால் குரல் எழுப்புபவர்கள் வாய்ப்புகள் தராமல் நசுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.
அப்படி ஒடுக்கப்பட்டிருக்கிறார் விஜே பார்வதி. தமிழ்நாட்டில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜே பார்வதி. ரேடியோவில் ஆர்ஜேவாக அறிமுகம் ஆன இவர் தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களை கவர்ந்தவர்.

v.j parvathy
இவர் சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து அண்மையில் வெளியேறினார். இவர் பேட்டி ஒன்றில் , தனக்கு பல படவாய்ப்புகள் வந்ததாகவும், அதில் தயாரிப்பாளர்கள் பலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் இதனால் நான் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதனால்தான் எனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்றார்.
இதனிடையே சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் கொடுத்த அலப்பறை கொஞ்ச நஞ்சம் அல்ல.. சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கியவர் என்பதால், தன்னை அப்படி தவறாக அழைத்தவர்கள் யார் என்பதை எப்படி கூறாமல் இருந்தார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பட வாய்ப்பு இல்லை என்பதை நாசூக்காக சொல்லாமல் நேடியாக சொல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனினும் நெட்டின்கள் கருத்து ஒரு புறம் இருந்தாலும் விஜே பார்வதி வெளிப்படையாக யார் என்பதை சொன்னால் சிக்கல் வெடிக்கும்- இன்னொரு மி டூவுக்கு கோலிவுட் தயாராகும்நிலை கூட வரலாம்.