×

மியா காலிஃபாவுக்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை!

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் ஆபாசப் பட நடிகைக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவிட்டு நடிகையும் விஜேவுமான பார்வதி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

 
மியா காலிஃபாவுக்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை!

ஓரினச் சேர்க்கையாளர்களை ஆசீர்வதிக்க மறுத்ததாக போப் ஆண்டவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மியா காஃலிபா டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவாக தமிழ் யூடியூப் பிரபலமும் நடிகையுமான விஜே பார்வதி கருத்துப் பதிவிட்டிருக்கிறார். 

ஹோமோசெக்ஸுவலாக இருப்பது நார்மல்தான். இதற்கு எதிராக வெளிப்படையாகப் பேசுங்கள் என்று விஜே பார்வதி கூறியிருந்தார். மேலும், `இயேசு கிறிஸ்து ஓரினச் சேர்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டதில்லை.ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அவர் சொல்லவில்லை என்று கூறிய ஜிம்மி கார்ட்டரின் கருத்தை இன்ஸ்டா போஸ்டில் மேற்கோள் காட்டியிருந்தார்.

காதலுக்கு எந்த பாலினமும் இல்லை. ஓரினச் சேர்க்கையாளர்களின் அன்பையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்’’ என்று பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். 

ஏற்கனவே ரசிகர் ஒருவர் நீங்கள் மியா காலிஃபா மாதிரியே இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு,`எந்த ஆங்கிளில் பார்த்தாலும் நான் அப்படி இல்லையே. ஒருவேளை கண்ணாடி போட்டிருப்பதால் அப்படி தெரிகிறது போல...’ என செம கூலாகப் பதில் கொடுத்திருந்தார் விஜே பார்வதி.

From around the web

Trending Videos

Tamilnadu News