2வது திருமணத்தில் சந்தோஷம் மட்டுமில்லை!.. குழந்தையும் பிறக்கப் போகுது!.. பிரியங்கா ஹேப்பி!..

 
priya

விஜய் டிவியின் ஆஸ்த்தான விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து தற்போது புதிய பாதையை நோக்கி பயணித்து வருகிறார். 2வது திருமணத்தில் அவருக்கும் குழந்தை பிறக்கப் போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பிரியங்கா, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்ததாக கூறப்பட்டது. பின்னர் 2022-ஆம் ஆண்டு இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரி தனித்தனியாக தங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்தனர்.

அதன்பிறகு தனது முழு கவனத்தையும் தொழில் வாழ்க்கையில் செலுத்திய பிரியங்கா, பல வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வந்தார். இதற்கிடையில் டி.ஜே. வாசி சச்சியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. வாசி தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அறிமுகம், காலப்போக்கில் ஆழமான நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியதாக கூறப்படுகிறது.

இந்த உறவு கடந்த ஏப்ரல் 16, 2025 அன்று நடைபெற்ற எளிமையான மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட ரகசிய திருமணத்தில் நிறைவு பெற்றது. திருமண செய்தி வெளியானபோது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிரியங்கா மற்றும் வாசி சச்சி தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து வருவதாக அறிவித்துள்ளனர். "Mom" மற்றும் "Dad" கேப்புகளை அணிந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் பகிர்ந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொழில் வாழ்க்கையில் வெற்றிகளை குவித்ததோடு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய தொடக்கத்தை கண்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது தாய்மையை நோக்கிய தனது புதிய பயணத்திற்காக ரசிகர்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.

Tags

From Around the web