Categories: Cinema News latest news television

விஜே பிரியங்கா யூட்யூப்பின் வருமானம் இவ்வளோ கம்மியா? அடப்பாவமே… ஆனா வெளியில் உருட்டு ஓவரா இருக்கே!..

VJ Priyanka: ரியாலிட்டி ஷோக்களில் தனக்கென ஒரு அடையாளத்தினை உருவாக்கி வைத்து இருக்கும் பிரியங்கா, யூட்யூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார். அதில் அவருக்கு வரும் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் நடிகை பிரியங்கா. அதிலும், அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினியாக பிரியங்கா தான் இருக்கிறார். ஊ சொல்றியா ஊக்கும் சொல்றியா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், தி வால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரியங்காவின் ஆங்கரிங்குக்கு பார்த்தவர்களே அதிகம்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

ஆனந்த விகடன் விருதுகள், விஜய் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த பெண் தொகுப்பாளினிக்காக பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டார். இருந்தும் ராஜூவிடம் முதலிடத்தினை தவறவிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

டிவியில் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் விஜே பிரியங்கா ஒரு யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். கேஷுவல் விலாக்களை போட்டு 1.38 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தன் சேனலில் கொண்டு இருக்கும் பிரியங்காவிற்கு வருமானமாக 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரத்துக்குள் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது.

Published by
Shamily