×

நாய்க்கு வந்த வாழ்வு பார்த்தியா...? மாஸ்டர் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
 

தொகுப்பாளினி ரம்யாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்...!
 
 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடைசியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். 

அந்தவகையில் தற்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்  என பதிவிட்டு  வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு நண்பர்களை வரவைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள்.... நாய்க்கெல்லாம் பிறந்தநாளா? இங்க மனுஷனுக்கு பொறந்தநாள் கொண்டாடுறதே திண்டாட்டமா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News