×

வலிமை அப்டேட் வேணுமுனா எனக்கு ஓட்டு போடுங்க... புது ஐடியா பிடித்த வேட்பாளர்... 

வலிமை அப்டேட் குறித்து சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் கூறி இருக்கும் கருத்து வைரலாக பரவி வருகிறது.
 
 
வலிமை அப்டேட் வேணுமுனா எனக்கு ஓட்டு போடுங்க... புது ஐடியா பிடித்த வேட்பாளர்...

போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் தயாரிப்பாளரான போனி கபூரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கடினமாக உழைத்து வருகிறோம். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என ட்வீட் தட்டி இருந்தார். தொடர்ந்து தல அஜித்தும், எல்லா அப்டேட்டும் உரிய நேரத்தில் வரும். இது எனது தொழில் என ரசிகர்கள் மீது தனது அதிருப்தியை தெரிவித்தார். இருந்தும், அஜித் ரசிகர்கள் அமைதியாகவே இல்லை. தொடர்ந்து, வலிமை அப்டேட் வேண்டும் என கூவிக்கொண்டே இருக்கிறார்கள்.


இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அவரிடம் சிலர் ரசிகர்கள் வலிமைஅப்டேட் எப்ப என கமெண்ட் தட்டி இருக்கிறார்கள். அதற்கு சிறிதும் அசராமல், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என டிவீட் தட்டி இருக்கிறார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News