×

தலைவர் எப்ப கால் பண்ணுவார்னு காத்திருக்கேன்! - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்  (வீடியோ)

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சர்மான், ரிது வர்மா, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘தலைவர் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர். எனவே, தலைவர் படத்தை பார்த்துவிட்டு என்னை செல்போனில் கூப்பிடுவார் என காத்திருக்கிறேன். கால் ரெக்கார்டர் கூட இன்ஸ்டால் செய்து விட்டேன். அவர் நம்பர் எனக்கு தெரியாது என்பதால் எனக்கு வரும் எல்லா செல்போன் எண்களையும் எடுத்து பேசி வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். 

இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரிந்து ‘இவரும் தலைவர் ரசிகராம்’ என உற்சாகம் அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News