×

வசந்தமாளிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வெளியான செய்தியால் திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வெளியான செய்தியால் திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

1970 களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களான சிவாஜி, என் டி ஆர் மற்றும் எம் ஜி ஆர் ஆகியவர்களுக்கு ஜோடியாக பிரபலம் ஆனவர் வாணிஸ்ரீ. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி பின்னர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டார்.. அவருக்கு வெங்கடேஷ் கார்த்திக் என்ற மகனும் அனுபமா என்ற மகளும் உள்ளனர். மகன் வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கிராமத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் மாட்டிக்கொண்டுள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தினரை பார்க்க முடியாததால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமான புகைப்படமும் இணையத்தில் பரவ திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்கொலைக்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News