×

கணவரை அடித்து துவைத்த ஜெனிலியா... என்ன மேடம் இப்டி ஓபனாவ சொல்லுவீங்க

வைரல் வீடியோவிற்கு பிறகு வீட்டில் என்ன நடந்தது என நடிகை ஜெனிலியா தெரிவித்து இருக்கிறார்.
 
 
கணவரை அடித்து துவைத்த ஜெனிலியா... என்ன மேடம் இப்டி ஓபனாவ சொல்லுவீங்க

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார். தமிழில் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியன், விஜயுடன் சச்சின் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. ஹாசினி மற்றும் ஷாலினி கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களிடம் செம பிரபலமாக தான் இருக்கிறது. ஜெனிலியா பாலிவுட்டில் நடிக்கும் போது, சக நடிகரான ரித்தேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்னர், பாலிவுட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெனிலியா தனது கணவருடன் கலந்து கொண்டார். அப்போது, அங்கு ப்ரீத்தி ஜிந்தா வர ரித்தேஷ் அவருடன் பேசி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் ப்ரீத்தி கையை பிடித்து முத்தம் கொடுக்க அருகில் நின்று கொண்டிருந்த ஜெனிலியா முகம் டக்கென மாறியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இந்த நிகழ்வை தொடர்ந்து ஜெனிலியா வீட்டில் கணவரை செமையாக வெளுத்தி வாங்கி இருப்பார் என சிலர் கலாய்த்தனர். அதையே தான் செய்திருப்பார் போல. வேடிக்கையாக பழைய வீடியோவுடன் வீட்டில் என்ன நடந்தது என்பதை இணைத்து ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். கடைசியாக உண்மையை ஒத்துக்கொண்டீர்களே என பல கமெண்டுகள் பறந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News