×

மனோரமா பயோபிக்கில் நடிக்கவேண்டும்… ஏனென்றால்? முன்னணி நடிகையின் ஆசையை தீர்ப்பார்களா தமிழ் இயக்குனர்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பழம்பெரும் நடிகை மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பழம்பெரும் நடிகை மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க முட்ட, கனா, நம்ம வீட்டுப்பிள்ள, வட சென்னை என வித்தியாசமான படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார். இப்போது அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் க பெ ரணசிங்கம் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஓடிடியில் ரிலிஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நீங்கள் நடிப்பீர்கள் எனக் கேட்டபோது அவர் அளித்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ’ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் அதில் நடிப்பேன் ‘ எனக் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை, குணச்சித்திரம் என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். தேசிய விருது மற்றும் பல தமிழக அரசின் விருதுகளை வென்றவர் ஆச்சி மனோரமா.

From around the web

Trending Videos

Tamilnadu News