×

எச்சரிக்கை... நீயாக ஓடிவிடு... கொரோனாவுக்கு கெடு... இவிங்க அக்கப்போரு தாங்கலயே!

தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
 

ஆனாலும், 144 தடை உத்தரவை பொதுமக்களில் சிலர் சாலைகளில் சென்று வருவதை பார்க்க முடிகிறது. அதிலும், இளசுகள் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி வலம் வருபவர்களை போலீசார் மடக்கி எச்சரித்து வருகின்றனர். சிலருக்கு தோப்புக்கரண போடும் தண்டனையை கொடுத்து அனுப்புகின்றனர். 

இதுஒருபுறம் எனில் கோவையில் கொரோனாவுக்கு எச்சரிக்கை விடுத்து இளசுகள் வைத்துள்ள பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 31ம் தேதிக்குள் இப்பூவுலகை விட்டு வெளியே போய் விடு. இல்லையெனில் 1.4.2020 முதல் உன்னை இப்பூவுலகை விட்டே விரட்டி விடுவோம். உனக்கு பயந்து மூடவில்லை. எச்சரிக்கை விடுகிறோ என அந்த பேனரில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எல்லாம் சரி கொரோனா வைரஸுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News