
Cinema News
விஜயகாந்தின் சூப்பர்ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா? எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?!..
Published on
நல்ல படங்கள் கைநழுவிப் போனால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.
விஜயகாந்த், ராதா நடித்து ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சூப்பர்ஹிட் படம் அம்மன் கோவில் கிழக்காலே. அனைத்து சென்டர்களிலும் சக்கை போடு போட்டது. அப்போது இந்தப் படம் 150 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 20 தியேட்டர்களில் 200 நாள்களைக் கடந்து ஓடியது.
இந்தப் படத்தில் முதலில் முரளி, ரேவதி ஜோடி தான் நடிப்பதாக இருந்ததாம். இயக்குனரின் முடிவே அதுதான். ஆர்.சுந்தரராஜன் முரளிக்கு அட்வான்ஸ்சும் கொடுத்துவிட்டாராம்.
Amman Kovil Kizhakkale
ஆனால் அந்த நேரத்தில் முரளி ஒரு கன்னடப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தாராம். அதை உடனடியாக முடிக்க வேண்டி இருந்ததால், சுந்தரராஜன் கேட்ட தேதியில் கால்ஷீட்டை உடனடியாகக் கொடுக்க முடியவில்லையாம். அதனால் முரளிக்குப் பதிலாக விஜயகாந்த், ராதாவை வைத்துப் படத்தைத் தொடங்கினாராம்.
இந்தப் படத்தில் விஜயகாந்த் செம மாஸாக நடித்து இருப்பார். இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விஜயகாந்துக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. படத்தில் ஒரு கிராமத்துப் பாட்டுக்காரனாக நடித்து இருப்பார். ராதா படித்த பணக்கார திமிர் பிடித்த கதாநாயகி. சின்னமணி என்ற கேரக்டரில் விஜயகாந்தும், கண்மணியாக ராதாவும் நடித்துக் கலக்கி இருப்பார்கள்.
Murali, Revathi
இருவருக்கும் மோதல் வந்து அது கல்யாணத்தில் முடிந்து அதன்பின் காதலாகிறது. கதை எப்படிப் போகிறது பாருங்கள். இளையராஜாவின் இசையில் சின்னமணிக் குயிலே, பூவ எடுத்து, காலை நேரப் பூங்குயில், உன் பார்வையில் ஓராயிரம் ஆகிய பாடல்கள் சூப்பர். படத்தில் விஜயகாந்த், ராதா இருவரின் நடிப்பும் பிரமாதம்.
1986ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் அம்மன் கோவில் கிழக்காலே. விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, செந்தில், ராதாரவி, வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஓபனிங் சாங்காக வரும் நம்ம கடவீதி பாடல், ஒரு மூணு முடிச்சாலே நல்ல கொண்டாட்டப்பாடல்கள்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...