போதையில இருந்தியாம்மா... கொடூர கலாயால் பின்வாங்கிய நடிகை

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் அந்த நடிகை. பிக்பாஸுக்கு முன்பே ஒல்லி நடிகருடன் துணை கேரக்டரில் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், பட்டிதொட்டியெங்கும் நம்ம நடிகைக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் இளம் நடிகருடன் சேர்ந்து நடித்த படமும் மைலேஜ் கொடுக்கவே, அடுத்தடுத்து படங்களில் கமிட்டானர். கவர்ச்சி ஏரியாவிலும் அவர் கலக்கவே, ரசிகர் வட்டமும் பெருகியது. கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் பக்கத்துக்கு நாட்டுக்கு சுற்றுலாப்போய், அங்கிருந்து அவர் பகிர்ந்த கவர்ச்சிப் படங்களிலும் சோசியல் மீடியாவில் வைரலாகின.
இந்தநிலையில், சமீபத்தில் நடிகை ஒருவர் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து புரட்சி என்கிறரீதியில் ஏகத்துக்கும் கருத்துச் சொல்லியிருந்தார் நம்ம நடிகை. அந்தப் பதிவு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. `ஏம்மா அதுல ஒரு தாய், தன்னோட குழந்தையத் தூக்கிட்டுப் போறதுதான் இருக்கு. இதுல எங்கிருந்து வந்துச்சு புரட்சி’ என்கிறரீதியில் பிரபலங்கள் தொட்டு நெட்டிசன்கள் வரை அவரைப் பலரும் கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.
இதனால், பதிவை சோசியல் மீடியாவிலிருந்து நீக்கிவிட்டார். அரசியல் புள்ளிகள் போல் இவருக்கும் அட்மின் இருக்கிறாரா என்று கேட்டால், அம்மணி போதையில் இப்படி செய்துவிட்டார் என்று காதைக் கடிக்கிறார்கள். என்னமோ பார்த்து சூதானமா இரும்மா என்று சீனியர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்களாம்.