×

நான் பேசிய அரசியலால் சூரரைப் போற்று பாதிக்கப்பட்டதா? சூர்யா விளக்கம்!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.

 

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் திரைப்படம் முதலில் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருந்தது. படத்தின் சில காட்சிகளுக்காக விமானப்படையிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழ் ஒன்று வந்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் அந்த சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் சூர்யா சமீபகாலமாக நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து  பேசும் அரசியல் மற்றும் சமூக கருத்துகள்தான் காரணமாதான் அந்த சான்றிதழ் தருவது இழுத்தடிக்கப்பட்டது என சொல்லப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் சூர்யாவிடம் கேட்டபோது கேட்டபோது சூர்யா அதை மறுத்துள்ளார். மேலும் ‘இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் அனுமதி கிடைத்தது. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. எல்லா நடைமுறைகளும் முடிந்து சான்றிதழ் வாங்குவதற்கு தாமதமாகிவிட்டது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News