Categories: Cinema News latest news

ஓடிடி, சேட்டிலைட் எல்லாமே வீழ்ச்சி… வேட்டையன் படத்துக்கு 70 சதவீத லாபம் வந்தது எப்படி?

இன்று பெரும்பால படங்கள் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டுகளிலேயே தங்கள் படத்தின் பெரும்பாலான லாபத்தைப் பெற்று விடுகின்றனர். அதன்பிறகு திரையரங்குகளில் ஓடுவது தனி லாபம். இப்படித் தான் வசூலை வாரிக் குவித்து வருகின்றனர்.

இது பெரிய நடிகர்களின் பிரம்மாண்ட படங்களுக்கு சாத்தியம். அதே நேரம் சின்ன பட்ஜெட்னா அது சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்துத் தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

சில மாநிலங்களில் படம் வெளியான 4 வாரங்களில் ஓடிடியில் வெளியிட அனுமதிக்கும்போது திரையரங்களுக்கு வரும் கூட்டம் கணிசமாகக் குறைகிறது. அதே நேரம் ஓடிடி மூலம் வரும் தொகையில் 10 சதவீத ராயல்டி தொகையை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

அந்த வகையில், ஓடிடி, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட் எல்லாம் வீழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது உண்மையா? அப்படி இருக்கும்போது லைகா புரொடக்ஷன் வேட்டையன் படத்துக்கு மட்டும் சேட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மூலம் 70 சதவீதத்துக்கும் அதிக லாபம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறதே.

vettaiya

ஒருவேளை மார்க்கெட் சரிஞ்சிருந்தா இந்த அளவுக்கு லாபத்தைப் பெற முடியுமா? இல்லன்னா அந்தப் படத்தோட ஸ்டார் வேல்யு தான் காரணமான்னு ஒரு வாசகர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

Also read: தக் லைஃப்ல லீக்கான அந்த மூணு விஷயங்கள்… ஹைப்பை அள்ளும் ஹைலைட்டுகள்

ஓடிடி மார்க்கெட், சேட்டிலைட் மார்க்கெட் சரிவுடன் இருப்பது உண்மை தான். கமல் சிம்புவை வைத்து எடுக்க இருந்த படம் நின்று போனதுக்குக் காரணமும் ஓடிடி, சேட்டிலைட் மார்க்கெட்டின் சரிவு என்பது உண்மை தான். படங்களோட விற்பனை குறித்து ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அப்படியே நம்பி விட வேண்டாம் என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்று தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v