×

ஏப்ரல் 14 வரை எச்.டி வீடியோ பார்க்கமுடியாது – அதிர்ச்சி கொடுத்த அமேசான் ப்ரைம்

ஊரடங்குக் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மக்கள் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துவதால் அதன் வேகம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே நிலைமைதான் உலகமெங்கும். இதனால் மக்கள் பலரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் பொழுதுபோக்கிற்காக இணையத்தையே பெருமளவு சார்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் ‘தங்கள் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எச்டி தரத்திலான வீடியோக்களைப் பார்க்க முடியாது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் சமூகவலைதளத்தில் ‘ ப்ரைமில் தொடர்ந்து படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் நேரத்தில், உள்ள அனைவருக்கும் இன்டர்நெட் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சில தவிர்க்க முடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க விரும்புகிறோம். அதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி குவாலிட்டியில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்’ என அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News