×

இறந்துபோன மகனை பார்க்க வேண்டும்... விமானம் இல்லாமல் கதறும் தந்தை - அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் இறந்து போன தனது மகனை முதலும் கடைசியுமாக ஒருமுறை பார்க்க வேண்டும் என துபாயிலிருந்து ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

விமானம் மூலம் இந்தியா வந்தவர்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவி விட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டி விட்டது. எனவே, விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசர காரணத்திற்காக கூட இங்கிருந்து வெளிநாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் பணிபுரியும் ஒருவர் இந்தியாவில் இருக்கும் தனது 3  மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும், ஆனால் விமானம் இல்லாததால் இங்கு வரமுடியாமல் தவித்து வருவதாகவும், தனது மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கண்ணீர்  மல்க கோரிக்கை வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News