1. Home
  2. Latest News

காலத்துக்கும் நின்னு பேசும் மீம் டெம்ப்ளேட்! பிரச்சினைனு சொன்னா திவாகர் கொழுப்ப பாருங்க

diwakar
பிக்பாஸில் இவர் இல்லைனா அவ்ளோதான்.. கண்டெண்ட்டே இருக்காது போல

வார இறுதி என்றாலே பிக்பாஸ் களைகட்டி விடும். நாள் முழுக்க ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் வார இறுதி நாள்களில் சத்தமே இல்லாமல்தான் இருப்பார்கள். ஏனெனில் விஜய்சேதுபதி என்ன கேட்க போகிறாரோ? யாரை வச்சு செய்ய போகிறாரோ என்ற பீதியிலேயே இருப்பார்கள். கடந்த எட்டு சீசன்களாக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசனில் பயணம் செய்து வருகின்றது.

20 போட்டியாளர்களுடன் களம் இறங்கிய இந்த சீசன் மக்களை கவர்ந்துள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஏனெனில் ஏற்கனவே மக்களின் எரிச்சலை சம்பாதித்த பிரபலங்கள்தான் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கின்றனர். அதனால் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களோடு இந்த சீசன் ஆரம்பமாகியிருக்கிறது. ஒரு சில பேர் தவிற இதர போட்டியாளர்கள் யார் என்றே தெரியவில்லை.

இன்னொரு பக்கம் பெண்கள் அணியும் ஆடை பற்றியும் இந்த சீசனில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவேத்தான் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஹிந்தி பிக்பாஸின் சாயல் இருப்பதாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் வாட்டர்லெமன் திவாகரை எதுக்கு உள்ளே போட்டார்கள் என்று அனைவருமே போர்க்கொடி தூக்கினார்கள்.

ஆனால் ஒட்டுமொத்த பிக்பாஸுக்குமே திவாகர்தான் கண்டெண்ட் கொடுத்து வருகிறார். அவர் செய்யும் ஒவ்வொரு செயலுமே மீம் டெம்ப்ளேட்டாக மாறி வருகிறது. நேற்றைய எபிசோடில் கூட விஜய்சேதுபதி விஜே பார்வதியை காரசாரமாக பேசிவிட்டார். இது விஜே பார்வதிக்கே கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்தது. அது சம்பந்தமான வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் பார்வதியும் திவாகரும்தான் கொஞ்சம் குளோசாக பழகி வருகிறார்கள். விஜய்சேதுபதி இப்படி சொல்லிவிட்டாரே என பார்வதி திவாகரிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். ஆனால் திவாகரோ  நாட்டாமை படத்தில் மிச்சர் மாமா மாதிரி எதோ சாப்பிட்டுக் கொண்டே பார்வதி சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை ஒரு மீம் டெம்ப்ளேட்டாக நெட்டிசன்கள் கிரியேட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.