ஜெயிலர் 2 ல நான் நடிச்சிருந்தால் கலெக்சன் அள்ளிருக்கும்- அலப்பறை செய்த வாட்டர் மெலன் ஸ்டார்
சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் என்ற பெயர் நிச்சயம் தெரியும். பிஸியோதெரபி மருத்துவரான இவர் நடிப்பின் மிது உள்ள ஆர்வத்தில் திரைப்படங்களில் வரும் பிரபலமான காட்சிகளை தனது பாணியில் நடித்துக் காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருவார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா போன்று வாட்டர் மெலன் வைத்து இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதன் பின்னரே இவர் தன்னை வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டார்.
இதன்பிறகு பல யூடியூப் சேனல்களின் நேர்காணல்களிலும் திவாகர் பங்கேற்று வந்தார். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
திவாகரின் இணையப் புகழுக்கு இணையாக சர்ச்சைகளும் அவரை தொடர்ந்து வந்துள்ளன. தன்னை மிகப்பெரிய நடிகராக முன்னிறுத்தி அவர் அளித்த சில பேட்டிகள் பல விமர்சனங்களை சந்தித்தன. பலரும் அவரை கழுவி ஊற்றி வந்தனர்.

இந்த நிலையில் திவாகர் இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயிலர் 2 பார்க்க போனேன் . அது சூப்பர்ஸ்டார் கோட்டை அங்கேயும் ரசிகர்கள் என்னிடம் வந்து செல்பி எடுத்தனர். அவர்கள் என்னை வாட்டர் மெலன் ஸ்டார் என்று கத்தியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசுகையில் ஜெயிலர் 3 வந்தால் நமோ நாராயணா நடித்த மூர்த்தி கேரக்டரில் திவாகர் நடித்தால் வேற லெவலில் இருக்கும் . ஜெயிலர் 2வில் நடித்த்கிருந்தால் வசூல் இன்னும் அதிகரித்திருக்கும் என்று கூறினார்.
இந்த பேட்டையை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
