Watermelon Diwakar: ரஜினிக்கே நடந்திருக்கு.. எனக்கு நடக்காதா? ஒரே போட்டா போட்ட வாட்டர்மெலன் திவாகர்
வெளியே வந்த பிறகு ரெஸ்பான்ஸ் எப்படி சார் இருக்கு என்ற ஒரே ஒரு கேள்வியைத்தான் நிருபர் வாட்டர்மெலன் திவாகரிடம் கேட்டார். ஐய்யய்யோ.. சார். பயங்கர ரெஸ்பான்ஸு சார். பிக்பாஸில் ஆறு வாரம் இருந்திருக்கிறேன். முதல் மூன்று வாரங்களில் நீங்கதான் டாப்ல இருந்திருக்கீங்கனு வைல்ட் கார்டில் உள்ளே வந்தவர்கள் சொன்னார்கள். நீங்க வெளியே வந்தது எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்று வெளியே வந்ததும் மக்கள் சொன்னார்கள்.
நீங்க இல்லாம அந்த ஷோ எப்படி இருக்கும்னு தெரியலனும் சொல்றாங்க. போர் அடிக்குது. ஃபன்னா இல்ல. ஒரே ஆளா இருந்து எல்லாரையும் துவம்சம் செஞ்சீங்க. நெகட்டிவிட்டியை உடைச்சு பாஸிட்டிவிட்டியா மாத்திருக்கீங்கனும் சொன்னாங்க. கானா வினோத்தும் உங்களுக்கும் எப்படி இருந்துச்சு என்ற கேள்விக்கு உண்மையிலேயே எனக்கு செட்டாகவில்லை என்று திவாகர் கூறியுள்ளார். மேலும் ஆரம்பத்தில் இயற்கையாவே போச்சு.
நாள் ஆக ஆக ஃபன்னா போச்சு. ஒரு சமயம் விஜய்சேதுபதி உங்க காம்போ நல்லா இருக்குனு சொன்னதும் அதிலிருந்து உருவ கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாரு. கானா வினோத்தை பொறுத்தவரைக்கும் எல்லா பிரச்சினையையும் கொளுத்திவிட்டு வேடிக்கையா பார்க்கிறவர். அவர் பக்கத்தில் நான் படுக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவருடைய ஒரிஜினல் முகத்தை நான் பார்க்க ஆரம்பிச்சேன்.
வெளியில் இருக்குறவங்களுக்கு தெரியாது. உள்ளே இருக்குறவங்களுக்குத்தான் தெரியும். உருவகேலி நிறைய பண்ணுவாரு. நிறைய பேரு மெய்யழகன் மாதிரி இருக்குனு சொன்னாங்க. அது வெளியில் வந்த பிறகுதான் எனக்கே தெரியும். அதை நானே ரசிச்சேன். ஆனால் உருவகேலிதான் அங்கு இருக்கு. இதனாலே எனக்கு மைனஸ்தான். ஏனெனில் என்னுடைய ப்ளஸே எமோஷனலாக நல்லா பண்ணுவேன்.
விஜே பிரியங்காவே ஒரு சமயம் சொல்லியிருக்காங்க, உங்க எமோஷனலுக்கு நான் பெரிய ஃபேன் என சொல்லியிருக்காங்க. ஆனால் அவரால் என்னுடைய ஒரிஜினாலிட்டி போயிருமோன்னு பயம் இருந்துச்சு என பேசியுள்ளார். நடிப்பு வராமல் ஏன் நடிப்பு அரக்கன்னு பேர் போடுறீங்கனு ஒரு ரசிகர் கேட்டிருக்கார். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்ற கேள்விக்கு, நடிப்பாலதான் இன்னிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே போயிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் காமெடி நடிகர் யோகி கூட என்னை மாதிரியே பண்ணியிருந்தார். அதுவே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி என்றும் கூறியுள்ளார்.
இப்ப மட்டும் நான் நடிக்கல, பள்ளிபருவத்தில் இருந்தே நான் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். எல்லா போட்டிகளிலும் நான் தான் ஃபர்ஸ்ட். பெரிய பெரிய நடிகர்களுக்கே இந்த மாதிரி நடந்திருக்கு. ஏன் ரஜினிக்கே அவருடைய முதல் படத்திலேயே , நீயெல்லாம் நடிகரா என்று கேட்டிருக்கிறார்கள். விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதனால் நான் மக்கள் கண்களில் பட ஆரம்பிச்சுட்டேன். நான் நடிப்பு அரக்கன் தான் சார். எந்த வித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
