×

ரெய்னாவும் ராயுடுவும் இல்லாமல் குழம்பிக் கிடக்கிறோம்… தோல்விக்கு பின் சி எஸ் கே வீரர் ஒப்புதல்!

சிஎஸ்கே அணி வரிசையாக இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

 

சிஎஸ்கே அணி வரிசையாக இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை அணி முதல் போட்டியில் மும்பையை வென்று ஆறுதல் அளித்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த இரு போட்டிகளிலும் தோற்று மண்ணைக் கவ்வியுள்ளது. நேற்று நடைபெற்ற 8 ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் சி எஸ்கே படுதோல்வி அடைந்தது. சி எஸ் கே அணி சிறப்பாக பந்துவீசி எளிதான இலக்காக 175 ஐ நியமித்தாலும், பேட்ஸ்மேன்களின் மந்தமான பேட்டிங்கால் படுதோல்வி அடைந்துள்ளது சி எஸ்கே.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேனான டு பிளெசிஸ் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘எங்கள் பேட்டிங் வரிசையில் ரெய்னா மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் குழம்பிய நிலையில் உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News