மகளுக்காக இணைந்துவிட்டோம் - மகிழ்ச்சியுடன் சொன்ன சைந்தவி!
ஜிவி பிரகாஷ்:
பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த "வெயில்" திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். ,ṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁṁ
முதல் படத்திலிருந்து கவனத்தை ஈர்த்தார். தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக சிறந்து விளங்கி வருகிறார்.
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் காதல் மனைவியான சைந்தவியை திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார் .
மகளுக்காக இணைந்துவிட்டோம்:
இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகளும் இருக்கிறார். இவர்களது பிரிவு ரசிகர்களால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது மேடை கச்சேரிகளில் இருவரும் சேர்ந்து பாடல் பாடியும் இசையமைத்தும் வந்தார்கள் .
இந்த நிலையில் தற்போது ஜி.வி மற்றும் சைந்தவி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. ஆம் தன்னுடைய மகனுக்காக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி தற்போது மீண்டும் இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஆம் பிரிவுக்குப் பிறகு மகளின் நலனுக்காக இருவரும் பேசி வருவதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
