×

நாங்களும் கைகுலுக்க மாட்டோம் – இங்கிலாந்தை அடுத்து தென் ஆப்பிரிக்காவும் அறிவிப்பு !

நாளை மறுநாள் தொடங்கவுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் போது கைகுலுக்குவதற்கு தடை போட்டுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

 

நாளை மறுநாள் தொடங்கவுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் போது கைகுலுக்குவதற்கு தடை போட்டுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

இந்தியாதென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக நேற்று இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர்களும் இந்திய வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவரை தொட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் போது இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வதற்கு தென் ஆப்பிரிக்க அணி தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ‘கைகுலுக்குவதன் மூலம் கிருமிகள் பரவுவதாக சொல்லப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்’

இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களும் இலங்கைத் தொடரில் கைகுலுக்க மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News