×

யார் சொன்னாலும் கேட்க மாட்டோம்!.. எதிர்ப்பை மீறி வெளியாகும் ‘இரண்டாம் குத்து’  

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் 2ம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் இரண்டாம் குத்து, இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் குமாரே இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி கடும் கண்டனத்தை பெற்றது. காரணம் ஏகப்பட்ட ஆபாசமான வசனங்கள் மற்றும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படத்தை தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்திற்கு ஏற்கனவே நடப்பு  தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், VPF கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களுக்கு VPF கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், இதை பயன்படுத்தி தன்னிச்சையாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News