×

பின்னணி இல்லாமல் முன்னேறிச் சென்ற மக்கள் செல்வன்

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...?
 
rummy

சினிமாவில் இன்று பிரபலமாகி இருக்கும் பலர் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே எந்தவொரு பின்னணியும் இல்லாமல் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றால் உச்சத்தில் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் ரஜினி, அஜீத் போன்றவர்கள் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து பிரபலமாகி உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விஜய்சேதுபதியும் இடம் பிடித்து உள்ளார்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் விஜய் சேதுபதி. 11வது வயதில் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். சென்னையில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் கிடைத்த வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே பெற்று வந்தார். துபாயிலும் சில மாதங்கள் அவர் பணிபுரிந்ததாகவும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது குடும்ப பின்னணி மற்றும் பொருளாதார தேவை ஆகியவை அவரை கலையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும் அவருக்கு கலையுலகில் உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் சின்னச் சின்ன வேலைகளை செய்து கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்று அதன் பின் பலவித போராட்டங்களுக்கு பிறகுதான் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். ஆரம்பத்தில் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் தொடருக்காக பல குறும்படங்களில் நடித்திருப்பார். லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பார். 

தனுஷின் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் தலை காட்டினார், விஜய் சேதுபதி. 2010ல் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பார். 
ரம்மி படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு ஏனோ அப்படம் சரியாக போகவில்லை. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பார். படத்தில் கூட மேல கூட வச்சி குச்சனூரு போறவளே...பாடல் செம ஹிட் ஆனது. 

’பீட்சா’, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பின் அவருக்கு கை கொடுத்த படங்கள் ’சூது கவ்வும்’ ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, நானும் ரௌடிதான், சேதுபதி, விக்ரம் வேதா போன்ற படங்களைச் சொல்லலாம். இந்தப்படத்தில் மாதவனுடன் நடித்து இருப்பார். வில்லனாக நடித்த முதல் படம் இதுதான். சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் விஜய்சேதுபதிக்கு சிறந்த வில்லன் அந்தஸ்தைத் தேடித் தந்தது. தொடர்ந்து அவர் கமலின் விக்ரம்2 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் சேதுபதி எடுத்து வைக்கும் அடிகள் எல்லாமே வெற்றிப் படிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் திணறி வரும் நிலையில் சர்வசாதாரணமாக வருடத்திற்கு ஏழு படங்களுக்கு மேல் நடித்து வரும் ஒரு நடிகர் உண்டென்றால் அவர் விஜய் சேதுபதி மட்டுமே என்று கூறலாம்.

எந்த ஒரு கேரக்டருக்கும் அவரது முகம் பொருத்தமாக இருப்பது தான் அவரது பெரிய பிளஸ். பக்கத்து வீட்டு பையன் போலிருக்கும் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களும், கம்பீரமான போலீஸ் கேரக்டருக்கு சேதுபதி போன்ற படங்களிலும், உள்ளத்தை உருக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு 96 போன்ற படங்களும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வேறெந்த நடிகரும் ஏற்க தயங்குகிற பாத்திரங்களிலும் வெகு எளிதாக நடித்துக் கொடுத்து அவருடைய செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

மேலும் வயதான பாத்திரத்திலும் அவர் நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘சீதக்காதி’ போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வெகு யதார்த்தமாக நடித்திருப்பார். இந்தப்படம் அமைதியாக செல்லும். இதில் ஒரு காரும் நடித்திருக்கும். இந்தப் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக தோல்விப்படங்கள் தான். விஜய்சேதுபதி இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் அவர் கதையை நம்பி படத்தில் நடித்ததால் தான் அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்தன. 

மேலும் இறுதிச்சுற்று படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை ஆரம்பித்த விஜய் சேதுபதி அதன் பின்னர் பேட்ட, மாஸ்டர் என வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார்.
மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றுள்ள விஜய்சேதுபதி மக்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவே மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு பேட்ட படத்திலும், கமலுக்கு விக்ரம் 2 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News