×

மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் - வெறித்தனமான வீடியோ!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

 

தொடர்ந்து மக்களை பாதுகாப்பாக வீட்லேயே இருக்க சொல்லி ஒவ்வொரு அரசாங்கமும் அறிவுறுத்தி வருவதுடன் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகரக்ளுக்கு கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்ப்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகுபலி இரண்டாம் பாக கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் சண்டை காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. "மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள்" என கண்டிப்புடன் கூறி பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News