×

ஆலியா மானசாவின் முன்னாள் காதலரின் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகை ஆலியா மானாசாவின் முன்னாள் காதலரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானர் ஆலியா மானசா.  இவர் ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சிலநாட்களுக்கு முன்பு வெளியானது.

சஞ்சீவுக்கு முன் ஆலியா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடிய மானஸ் என்பவை காதலித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அவரை பிரிந்து விட்டார். அதன் பின்னரே அவர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஆலியாவின் முன்னாள் காதலர் மானஸ் அவரது சுபிக்‌ஷா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்கள் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News