×

வாலிப வயதில் பளுதூக்கும் போட்டி!.. அமைச்சர் ஜெயக்குமாரா இது? - ஆச்சர்ய புகைப்படம்

சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விஷயங்கள் டிரெண்டிங்கில் வருவதுண்டு. 
 

கடந்த சில நாட்களாகவே தங்களின் மலரும் நினைவுகளை உணர்த்தும் புகைப்படங்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வாலிப வயதில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து ‘பள்ளியில் பலு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது....’ உடல் பலமே மனபலம் என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ஆகா அருமை,அப்ப எல்லாம் இந்த சிங்கப்பூர் ஐட்டிய போட்டுக் கொண்டே வெளியில் சுற்றித் திரிவார்கள். பர்மா பஜாரில் கிடைக்கும் 10 ரூபாய் என்று நினைக்கிறேன்’ என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், சிலர் அவரை கிண்டலடித்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News