×

ஒரு தாயாக இந்த தண்டனையை வரவேற்கிறேன் – முன்னணி நடிகை & அரசியல்வாதி கருத்து !

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை வரவேற்பதாக சொல்லியுள்ளார்.

 

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை வரவேற்பதாக சொல்லியுள்ளார்.

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை நிறைவேற்றத்துக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு ‘தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அனைவரும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமே நிர்பயா வழக்குதான் என்பார்கள்.ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கை கையாண்டோம்?

இம்மாதிரியான குற்றங்களுக்கு ஒரு துளி கூட கருணை காட்ட முடியாது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன். தண்டனை வழங்குவதற்கு முன்னர் இத்தனை வருடங்கள் குற்றவாளிகளை பாதுகாத்தால் அவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்? உடனடியான நீதி தேவைப்படுகிறது. அப்போதுதான் நம் சமுதாயத்தில் பயம் ஏற்படும்எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News