×

நாங்க ரொம்ப பிஸி… இப்படி எல்லாம் கூடவா தலைப்பு வைக்கிறாய்ங்க!

சுந்தர் சி தயாரிப்பில் அவரது உதவியாளர் பத்ரி இயக்கும் புதிய படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

சுந்தர் சி தயாரிப்பில் அவரது உதவியாளர் பத்ரி இயக்கும் புதிய படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியப் பெற்ற திரைப்படம் மாயா பஜார். ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவை த்ரில்லர் படமாக வெளியானது மாயா பஜார். அந்த படத்தின் உரிமையை பெற்ற இயக்குனர் சுந்தர் சி சன் டிவிக்காக தனது உதவியாளர் பத்ரியின் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இதில் பிரச்சன்னா, யோகி பாபு மற்றும் ரைசா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

ஆனால் தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் பத்ரி. இந்த படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி என்று வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News